Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் காதல் திருமணம் செய்ய தயாரான ஐஸ்வர்யா!! லதா ரஜினிகாந்த்யின் அதிரடி முடிவு!!

Aishwarya is ready to get married again!! Action decision of Lata Rajinikanth!!

Aishwarya is ready to get married again!! Action decision of Lata Rajinikanth!!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்பு இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள், அவர்களுடைய வாலிப வயது வரும் பொழுது நம் இருவருக்கும் ஒத்து வராது எனக் கூறி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

முதலில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பரப்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். எனினும் கொஞ்ச காலம் இது குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருக்கவே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய மகளையும் மருமகனையும் சமாதானம் செய்து மீண்டும் விவாகரத்து பெறாமல் ஒன்றாக வாழ செய்ய முற்படுகிறார் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. விவாகரத்திற்கு ஐஸ்வர்யா வேறொரு காதலில் உள்ளது தான் காரணம் என ஒருபுறமும் தனுஷ் அவர்கள் தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதால் ஐஸ்வர்யா இந்த முடிவை எடுத்தார் என்று ஒரு புறமும் பேசப்பட்டு வந்தது.

எது எப்படியோ ஆனால் எங்களுடைய முடிவில் நாங்கள் கண்டிப்பாக உள்ளோம் என நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்னர் நடிகர் தனுஷ் அவர்கள் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் பரவிய நிலையில் அதற்கான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

திடீரென பயில்வான் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விதமாக ரஜினி அவர்களுடைய மகள் ஐஸ்வர்யா காதலில் இருப்பதாக தெரிவித்தார். இந்த செய்தியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் தாயார் லதா ரஜினிகாந்த் அவர்களுடைய காதிற்கு செல்லவே, ஏற்கனவே உன்னுடைய விருப்பத்தின் பேரில் காதல் திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்வில் வெற்றி பெறாமல் தற்பொழுது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறாய் என்றும் மீண்டும் ஒரு காதல் திருமணம் என்பது எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் தெரிவித்ததாக பயில்வான் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் உனக்கு ஒரு துணை வேண்டும் என நீ நினைக்கும் பட்சத்தில் உனக்காக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் காதல் திருமணத்திற்கு அனுமதிக்க முடியாது காரணம் ஏற்கனவே நீ எடுத்த முடிவானது சரியில்லை என்றும் தற்பொழுது வாலிப வயதில் உனக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் இந்த திருமணம் சரி வராது என்றும் லதா ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவுரை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version