Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வியர்வை துளிகளுடன் போஸ் கொடுத்த சூப்பர்ஸ்டாரின் மகள் – புகைப்படம் உள்ளே…..

Representative purpose only

Representative purpose only

உலகமே போற்றும் கோலிவுட் சூப்பர்ஸ்டார் தான் நம் ரஜினிகாந்த். அவர் குணச்சித்திர நடிகர் YG மஹேந்திரன் அவர்களின் நெருங்கிய உறவினரான லதாவை மணந்துள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற மகள்கள் உள்ளனர்.

இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரை உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக பட்டையை கிளப்பும் நடிகர் தனுஷை மணந்துள்ளார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் அஸ்வினை முதலாவதாக மணந்துள்ளார். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் உள்ளார். பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வினை விவாகரத்து செய்தார். பின்னர் கடந்த ஆண்டு விசாகன் வணங்காமுடியை மணந்தார்.

இதில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கிராபிக் டிசைனராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், தனது கணவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து 3 திரைப்படத்தை இயக்கினார்.

ஐஸ்வர்யா R.தனுஷ் யோகாவில் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி ஏதாவது ஒரு ஆசனம் செய்வது போல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

இன்று வியர்வை துளிகளுடன் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

காண்க :

 

Exit mobile version