ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் ஊடகங்களால் போலியாக ஜோதிக்கப்பட்டு வந்துள்ளார். பிரபல பெரிய குடும்பத்தின் வாரிசான இவர் சில காலமாகவே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் காலில் ஏதோ அவருக்கு பிரச்சினை இருக்கிறது என்றவாறெல்லாம் youtube தளத்தின் வாயிலாக தொடர்ந்து போலியாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை பொய்யான செய்தி என்றும், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அவர், அவரது தகப்பன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஸ்ரீஹரி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.
அவர் அதில் குறிப்பிட்டதாவது, பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும், சாமானியர்களின் குழந்தையாக இருந்தாலும் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். குழந்தைகளின் மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை போலியாக பரப்புவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. youtube தளத்தை நடத்தும் google தளத்திற்கு நீதிபதி பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார். உடல்நிலை குறைவாக உள்ளது என்று youtube வீடியோக்கள் வெளிவந்து அந்த குழந்தையின் மனதிற்கு வேதனை அளித்துள்ளது. என்ன ஒரு வக்கிர புத்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் மீது அவதூறு பரப்பும் சில வீடியோக்கள் வெளிவரும் போதும் google நிறுவனம் கவனிக்காமல் இருக்கக் கூடாது. youtube ஒன்னும் அறக்கட்டளை இல்லை. அது ஒரு மிகப்பெரிய வியாபார தளம். ஆராத்யா பச்சன் குறித்த வீடியோக்கள் உடனடியாக சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.