Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா?

aishwarya-rajinikanth-celebrates-with-the-film-crew-are-these-the-heroes-in-lal-salaam

aishwarya-rajinikanth-celebrates-with-the-film-crew-are-these-the-heroes-in-lal-salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா?

முன்னணி   நடிகர்களில்  ஒருவராக இருப்பவர்கள்    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைதளங்களில் தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி எனவும் வைத்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ வாய்ப்பில்லையே என்று கூறி வந்தனர்.

மேலும் தனுஷ் மட்டும் ஐஸ்வர்யாவின் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அந்த பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்தது. இருவருமே தங்களுடைய படவேலைகளில் பிஸியாக இருந்தனர். ஐஸ்வர்யா மீண்டும் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். அதுபோலவே தனுஷும் நானே வருவேன். வாத்தி , திருச்சிற்றம்பலம் பல படங்களின் பாடல்களை பாடி வந்தார்.

மேலும் பார்ட்டி ஒன்றில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே பங்கு பெற்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றதாகவும் கூறினர்.ஆனால் தற்போது இவர்களைப் பற்றி தகவல் கசிந்தது. அந்த தகவலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆரியபுரத்தில் உள்ள பிளாட் ஒன்றில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இருவரும் பிரிந்த நிலையிலும் அவர்களின் வீட்டுப் பெயர் பலகை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  என்ற பெயர் நீக்கப்படவில்லை.

மேலும் தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே அந்த வீட்டிற்கு சென்று வருவதாகவும் தங்களுடைய வாழ்க்கை நினைவுகளை மறக்க முடியாமல் அந்த வீட்டிற்கு சென்று வருகின்றார்கள் என கூறுகின்றார்கள். இதன் மூலம் இருவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து திரைப்படங்களை இயக்குவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இவர் தற்போது லால் சலாம் என்னும் படத்தை இயக்கி வருகின்றார் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கின்றார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கின்றார். அதனைத் தொடர்ந்து நேற்று ஹோலி  பண்டிகையை முன்னிட்டு லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் குழுவினருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹோலி பண்டிகை கொண்டாடினார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version