Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் பாடகர், இயக்குனர், யோகா ஆசிரியர் என பல பரிமாணங்களை கொண்டவர்.

இவருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமண நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தங்களது பதினெட்டு வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தளங்களில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் எனவும், அனைத்து தற்காப்பு முறைகளையும் பின்பற்றியும் கொரோனா பாசிட்டிவ் ஆகிவிட்டதாக கூறியுள்ளார் .

 

Exit mobile version