உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

0
189
#image_title

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். 1994ம் ஆண்டு தனது 21 வயதில் உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இதன் பின்பு, தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜீன்ஸ்’ படம், மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்து வெளியாகி நல்ல வசூல் செய்த பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார். அதில் நந்தினி கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். அவருடைய அழகு, தோற்றம், தோரணை எல்லாம் ரசிகர்களை சுண்டி இழுத்தது.

இவர் பல பிலிம்பேர் விருதுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நடிகர் 2009 இல் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்துக் கொண்டிருந்தபோது, ‘குரு’ படத்தில் நடித்த அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா முதன் முதலாக பாலிவுட் நடிகர் சல்மான்கானை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தாமல் மறைமுகமாகவே காத்து வந்தனர். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவிற்கு ஐஸ்வர்யா ராய் நுழையும்போது, பின்பலமாக இருந்து உதவி செய்தார் சல்மான் கான்.

அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் சினிமாவில் ரொம்ப பிஸியாக நடித்து வந்தனர். ஐஸ்வர்யா ராய்க்கு பல மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்து கொள்ள சல்மான் எண்ணினார். ஆனால், இவர்களுடைய காதலை பிடிக்காத சிலர், ஐஸ்வர்யா ராய்யின் தற்போதைக்கு திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறி அட்வைஸ் செய்துள்ளனர். இந்த நேரத்தில் திருமணம் செய்தால் கேரியர் போய்விடும் என்று தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்யை நடிகர் சல்மான் திருமணத்திற்கு கட்டாயப்படுத்த, அந்த தருணத்தில் ஐஸ்வர்யா சல்மான் கானிடம் எடுத்து கூறுகிறார். இப்போதைக்கு திருமணம் வேண்டாம். கேரியர் ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார். ஆனால், சல்மான் கான் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை ஒதுக்கினார். இதனால் கோபமடைந்த சல்மான் கான் ஐஸ்வர்யா தங்கி இருந்த அப்பார்மெண்ட்டிற்கு சன்று சண்டை போட்டுள்ளார். அப்போதுதான் எல்லோருக்கும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து பல செய்திகள் வெளிவரத் தொடங்கின.

சிலரின் பேச்சை கேட்டு ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் குறித்து சில ஊடகங்களில் அவதூறாக பேச, சல்மான் கான் எரிச்சலாகி அமெரிக்கா சென்றுவிட்டார். திரும்பி வந்த சல்மான் கான் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் யாரையும் காயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார். இதன் பிறகு இருவரும் தங்கள் காதலை முறித்துக் கொண்டனர்.