Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

வேலூரில் திருமணம் ஆன 2 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் அம்மன் நகரை சேர்ந்தவர் அஜய்குமார் என்பவர். மேலும் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா.இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.இதனை அடுத்து இவர்கள் இருவரும் கீழ்மொணவூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.திருமணமான மூன்றாவது நாளே அஜய் குமாருக்கு அர்ச்சனா மீது சந்தேகம் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது.இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில்
அர்ச்சனாவுக்கு கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அர்ச்சனா அவரது தாய் வீட்டிற்கு ஓய்வெடுக்க போவதாக கூறி சென்று விடுவார்.இதனை அடுத்து அஜய் குமார் பலமுறை அர்ச்சனாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ள நிலையில் அர்ச்சனா வர மறுத்து விட்டதால் கணவர் அஜய் குமார் வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை அவரது உறவினர்களின் வாட்ஸ் அப்க்கு அனுப்பி வைத்து விட்டார்.உறவினர்கள் இதனை கண்டு அவரது வீட்டிற்கு வந்தபோது அஜய் குமார் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version