வணக்கம் நண்பர்களே… அஜித் படத்துல நடிக்க கேட்டுருக்காங்க… செம்ம அப்டேட் கொடுத்த ஜி பி முத்து!

0
156

வணக்கம் நண்பர்களே… அஜித் படத்துல நடிக்க கேட்டுருக்காங்க… செம்ம அப்டேட் கொடுத்த ஜி பி முத்து!

நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் துணிவு மற்றும் அஜித் 62 ஆகிய படங்களை முடித்த பின்னர் அவர் 18 மாதங்கள் உலகம் முழுவதும் இரு சக்கரவாகனத்தில் சுற்றுலா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் படங்கள் எதுவும் அடுத்தடுத்து ரிலீஸாகாது. அவர் கைவசம் உள்ள கடைசி படம் விக்னேஷ் சிவன் இயக்கும் படம்தான்.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தோடு டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜி பி முத்துவும் அதை உறுதி செய்துள்ளார். அதில் “அஜித் படத்தில் நடிக்க கேட்டுள்ளார்கள். வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலம் ஆன ஜி பி முத்து, தன்னைத் தாக்கி வரும் கடிதங்களைப் படித்து அதை வீடியோவாக்கி யுடியூபில் வெளியிட்டு லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை சேர்த்தார். அவரின் பேச்சுவழக்கும், வெகுளித்தனமும் பலரையும் கவர, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்கும் சென்று வந்தார். இப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.