‘அஜித் 63’.. சன் பிச்சர்ஸ் தயாரிப்பது கன்ஃபார்ம்! சம்பளம் எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித்.பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தல,அல்டிமேட் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.தீனா,வில்லன்,வீரம்,விசுவாசம் உள்ளிட்ட படங்களில் மாஸ் ஹீரோவாக கலக்கி உள்ள இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு.இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிய இப்படத்தை பாலிவுட் இயக்குநர் போனிக் கபூர் தயாரித்தார்.இப்படத்தில் மஞ்சு வாரியார்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 250 கோடி வரை வசூல் செய்தது.
இதனை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காமல் தடைப்பட்டு வந்தது.வருகின்ற அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ.150 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.
ஜெயிலர் வெற்றி பின்னர் மாஸ் ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வரும் சன் பிச்சர்ஸ் அஜித்துக்கு 150 கோடி சம்பளம் கொடுத்து நடிக்க வைக்கிறது என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.