பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாகும் அஜித்

0
198

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் 2021ல் முதல் பாகமும் 2022ல் இரண்டாம் பாகமும் வெளியாகும் என தெரிகிறது

இந்த நிலையில் இதே ராஜராஜசோழன் கதையை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைக்கதை எழுதியுள்ளார் என்பதும், இந்த திரைக்கதைக்கு மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் பெரும் உதவி செய்து இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த படத்தில் ராஜராஜ சோழனாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் முழு வடிவம் பெற்றுள்ளதாகவும், இந்த படமும், இதில் ராஜராஜசோழன் கேரக்டரில் அஜித் நடிக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ’தல 61’படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

விஷ்ணுவர்தன், அஜித் ஏற்கனவே பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் இணைந்துள்ள நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணையும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது