தயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித் !! கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு!! 

0
117
Ajith cheated the producer!! Allegation made by Bagheer!!

தயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித் !! கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு!! 

நடிகர் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். இது பற்றி கூறப்படுவதாவது,

நடிகர் அஜித்குமார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவரிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு மற்றும் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன், மற்றும் பார்த்திபனின் வித்தகன் ஆகிய படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் அஜித் குமாரை பற்றி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித்குமார் தனது பெற்றோரை மலேசியாவிற்கு விடுமுறைக்கு அனுப்ப விரும்பி பல வருடங்களுக்கு முன்னால் பணத்தை கடனாக பெற்றதாகவும், அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து அந்தப் பணத்தில் சரி செய்து கொள்ளலாம் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை அவர் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. எனக்கு ஒரு படமும் நடித்துக் கொடுக்கவில்லை. இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட அதைப்பற்றி அவர் பேசவே இல்லை. அவர் தன்னை ஜென்டில்மேன் என கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.

அஜித்தின் மனைவி ஷாலினி எனக்கு ஒரு நல்ல தோழி. அவரை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அஜித்திற்கு நல்ல குடும்பம் இருக்கிறது. ஒரு படத்திற்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் என்னை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன??

தயாரிப்பாளர்கள் ஏ.எம். ரத்னம் போன்றோரும் அஜித்தின் படத்தை தயாரித்து நஷ்டத்தை சந்தித்ததாகவும் ஆனால் அவர்களுக்கும் அஜித் உதவவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை அஜித் எந்த பதிலையும் கூறவில்லை.

ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் மீது இதேபோல புகார் வந்தது. தற்போது அடுத்ததாக அஜித் மீது குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது.