அஜித் குமார் படத்தின் அப்டேட் வந்துடுச்சி!! இப்போதான் ரொம்ப சந்தோசமா இருக்கு!!

0
117
Ajith Kumar movie update has arrived !! Be so happy right now !!

அஜித் குமார் படத்தின் அப்டேட் வந்துடுச்சி!! இப்போதான் ரொம்ப சந்தோசமா இருக்கு!!

திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார், அவருடைய நடிப்புக்கு  மட்டுமில்லாமல் அவருடைய தன்னடக்கம் மற்றும் பொதுப்பணி செய்யும் அவரின் நல்லுள்ளத்திற்கே பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் அவர் தனது ரசிகர்கள் அவருக்கென உருவாக்கிய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு குடும்பங்களை கவனிக்க சொன்ன மாமனிதன் தல அஜித் குமார்.

அஜித் குமார் எச் வினோத் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார் மேலும் தற்போது வலிமை எனும் படத்தில் போனி கபூர் தயாரிப்பில் சில வருடங்களாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. மேலும் இதன் முதல் பார்வை இந்த மாதம் 1 ஆம் தேதியான தல அஜித் குமார் அவர்களின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என தகவல் வந்திருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் 2 ஆம் அலை மக்களிடையே அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் ரசிகர்களின் பொது நலன் கருதி அதன் முதல் பார்வை தள்ளிவைக்கப்பட்டது.

இதனால் பல வருடங்களாக எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் இந்த முதல் பார்வை செய்தி அவரின் ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பிறகு முதல் பார்வை தள்ளிவைப்புக் குறித்து கூறிய போது மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு அந்த செய்தி பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. இதனால் மனம் உடைந்து போன ரசிகர்களுக்கு தற்போது சந்தோசமளிக்கும் வகையில் தல அஜித் குமார் நடிக்க உள்ள 2 திரைப்படங்கள் குறித்து தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் ஒரு படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளாராம்,  மற்றொரு படத்தை சிவா இயக்க உள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வைரலாகி வருகிறது.