இனி நடிக்க மாட்டேன்.. இது தான் என் பிளான்!! ஒரேடியாக பிரேக் எடுத்த அஜித்!!

0
107
Ajith Kumar took a break from cinema for three years..

நடிகர் விஜய் தனது அரசியல் பயணம் காரணமாக சினிமா துறையில் இருந்து விலகியதை தொடர்ந்து, தற்போது அஜித் குமாரும் மூன்று வருடங்கள் சினிமாவிற்கு பிரேக் விடப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்களை மையமாக வைத்தே தமிழ் சினிமா பெரும்பாலும் பொருளாதாரத்தை ஈட்டி கொண்டு இருந்த நிலையில், தற்போது இருவரும் சினிமா துறையை விட்டு வெளியேறுகின்றனர் என்ற அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு பெரிய மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள காரணமாக இருப்பது அவருடைய கார் ரேசிங் தான். இவர் தற்பொழுது ஐரோப்பாவில் நடக்க இருக்கும் கார் ரேசிங்கிற்காக அஜித்குமார் கார் ரேசிங் என்ற ஒரு குழுவை அமைத்த பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு தன்னை முழுவதுமாக கார் ரேஸ்ங்கிற்காக தயார்படுத்த உள்ளதாகவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா துறையில் விஜய், அஜித் ஆகியவர்களுக்கு அடுத்தபடியாக யார் ? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இவர்களுக்கு அடுத்து இருக்கும் நடிகர்கள் சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்றவர்கள் தான். ஆனால் சினிமாவில் இவர்களுடைய பாதை என்பது தனித்துவமாக இருக்கும் நிலையில் போட்டி போட வாய்ப்புகள் குறைவே.

இவர்கள் அனைவரும் தனக்கான தனி இடத்தை தக்க வைக்க நினைக்கிறார்களே தவிர, யாரும் முதலில் வர விரும்பவில்லை. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தான் அடுத்த மாஸ் ஹீரோவாக வருவார் என சினிமா வட்டார கணிப்புகள் தெரிவிக்கின்றன.