தமிழ் சினிமா துறையில் பின்புலம் இன்றி தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த இன்று பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற நடிகராக மட்டுமல்லாது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வீரராகவும் விளங்குபவர் அஜித்குமார். இவர் குறித்து தயாரிப்பாளர் தானு அவர்கள் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களின் மனதை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது.
தயாரிப்பாளர் தானு அவர்கள் அஜித்குமார் குறித்து பகிர்ந்தவை :-
கடந்த 2000 ஆவது ஆண்டின் பொழுது தன்னுடைய தயாரிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடிகர் அஜித், அவருக்கு ஜோடியாக தபு, நடிகை ஐஸ்வர்யா ராய், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களை கொண்டு வெளியான திரைப்படமாகும்.
இத்திரைப்படம் வெளியான ஆண்டுக்கு அடுத்த ஆண்டு 2001 இல் தயாரிப்பாளர் தானு உடைய மனைவி சிங்கப்பூரில் இறந்து விட்டதாகவும் அவருடைய இறப்பு செய்தியை அறிந்தவுடன் நடிகர் அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி இருவரும் தயாரிப்பாளரின் வீட்டு வாசலில் 4 மணி நேரமாக அவர்களுக்காக காத்திருந்ததாகவும் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்த சோகமான சூழ்நிலையில் இறுதிவரை தன்னுடன் நின்று தனக்கு துணையாக இருந்தவர் அஜித் குமார் என்றும் வேறு எந்த நடிகராக இருந்தாலும் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்றும் தயாரிப்பாளர் மனமுருகி தெரிவித்திருப்பது ரசிகர்களை கலங்க வைக்கிறது.