நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் அணி வெற்றி பெற வேண்டும் என அவரின் ரசிகர் கூட்டம் பதிவிட்டு வருகின்றனர். இன்று( ஜனவரி 11) தொடங்கும் கார்பந்தயமானது தொடர்ச்சியாக 24 மணி நேரம் அதாவது நாளை வரை நடக்கும். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு பல ரூல்ஸ் உள்ளன. குறைந்தது மூன்று முதல் ஐந்து நபர் கொண்ட அணியாக இருக்க வேண்டும். தொடர்ந்து 24 மணி நேரமும், 240 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்ட வேண்டும். அணியில் உள்ள ஒரு நபர் அட்லீஸ்ட் 2 மணி நேரமாவது தொடர்ச்சியாக கார் ஓட்ட வேண்டும் ஆகிய பல கண்டிஷங்களை உள்ளடக்கியதுதான் ஐரோப்பிய கார்பந்தயம். இந்த போட்டியானது, துபாயில் தற்போது நடந்து வருகின்றது.
இந்தப் போட்டியானது அக்டோபர் மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும். அதுவரை தான் நடிக்க இயலாது என அவர் பதிவிட்டிருந்தார். இவர் இதற்கு முன் தொடர்ச்சியாக நடித்துள்ள இரண்டு படங்கள் அதாவது குட் பேட் அக்லி மற்றும் விடா முயற்சி ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக போகின்றது. இந்நிலையில், இவரது பழைய வீடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அதில், ஒரு நேர்காணலில் அஜித்தை ரசிகர்கள் கேள்வி எழுப்பி அதற்கு அவர் பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகை, கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அஜித் சிரித்துக் கொண்டே, மிஸ்டர் கமல்ஹாசன் அல்லது கமல்ஹாசன் சார் என்று குறிப்பிடுங்கள் என ரசிகையின் தவறை சரி செய்திருப்பார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்களால் பெரும்பாலும் பகிரப்பட்டு வருகின்றது. அதற்குப் பிறகு 12 ஆண்டுக்கு மேலாக இவர் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இவ்வளவு ஏன் அவர் பட ப்ரமோஷனுக்கு கூட அவர் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.