Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவை விட்டு வெளியேறி ஐரோப்பா நகரில் செட்டில் ஆகப்போகும் அஜித்!

இந்தியாவை விட்டு வெளியேறி ஐரோப்பா நகரில் செட்டில் ஆகப்போகும் அஜித்!

நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று வாழ்ந்து வருகிறார்.

இப்போது அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் நடக்கிறது. அங்கு ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸை இயக்குனர் ஹெச் வினோத் படமாக்கி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதியோடு மொத்த ஷூட்டிங்கும் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோடு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிவதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தைப் பற்றிய ஒரு தகவல் சமீபகாலமாக ஊடகங்களில் பரவி வருகிறது. அஜித் விரைவிலேயே இந்தியாவை விட்டு வெளியேறி ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இப்போது அஜித் ஐரோப்பாவுக்குப் பயணம் சென்று வந்த இப்போது இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தங்கிவிட முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.

Exit mobile version