DMK TVK: 24 மணி நேரம் நடக்கும் 24ஹெச் கார் ரேஸ் அஜித் குமார் அவரது அணியானது மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் கொண்டாட்டத்தில் அஜித் இந்திய தேசிய கொடியை வீசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேற்கொண்டு அவரது உடையில் தமிழக விளையாட்டு துறையில் லோகோவையும் பொரித்திருந்தார். போட்டியில் வெற்றி பெற்றதும் அதனை சுட்டிக்காட்டி பெருமிதம் கொண்டார்.
இவ்வாறு அவர் செய்தது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி தமிழக விளையாட்டு துறையின் லோகோவை பயன்படுத்தியதற்கு நன்றி கூறியதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இவ்வாறு இருக்கையில் கார் ரேஸில் வெற்றி பெற்றதை அடுத்து அஜித் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், விஜய் வாழ்க அஜித் வாழ்க என கூறுகிறீர்கள் நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை எப்பொழுது வாழப் போகிறீர்கள்?? என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்வாறு அவர் பேசியது விஜய் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுடைய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் முன்னணி நடிகர்களில் வலம் வரும் விஜய் தனது திரை பயணத்தை விட்டு மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்குள் கால் பதித்துள்ளார். அவ்வாறு இருக்கும் பொழுது எப்படி விஜய் குறித்து இப்படி அஜித் கூற முடியும் என கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி அஜித்துடைய ரசிகர்களின் வாக்கும் விஜய்க்கு மிகவும் முக்கியமான ஒன்று. தற்சமயம் அஜித் இவ்வாறு பேசியுள்ளது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இதுதான் காரணம் என திமுக இதை கையில் எடுத்து அரசியலாக்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண உத்தியோக படுத்திக்கொள்ளும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.