Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் !

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் !

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.

தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘தளபதி 68’ படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும்  இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இயக்குநராக நடிகர் விஜய் மகன் சஞ்சய் களமிறங்க உள்ளதாகவும், அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகுவதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்திருக்கிறது.

லைக்கா நிறுவனம் மூலம் விஜய் மகன் சஞ்சய் நடிகர் அஜீத்தை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தற்போது, சஞ்சய் அளித்த பேட்டி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டுள்ளனர். அதற்கு சஞ்சய், எனக்கு அஜீத் அங்கிளை ரொம்ப பிடிக்கும். அவர் மேன் ஆஃப் கெத். எங்க அப்பாவை தவிர அஜித் மற்றும் விஜய் சேதுபதியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லைகா நிறுவனம் அஜித்தை வைத்து விடாமுயற்சியும், சஞ்சய் வைத்து இன்னொரு படமும் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version