Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விபத்தில் சிக்கிய அஜித்.. மனம் தளராது விடாமுயற்சியால் சாதித்துக் காட்டிய சுவாரஸ்ய சம்பவம்!

#image_title

விபத்தில் சிக்கிய அஜித்.. மனம் தளராது விடாமுயற்சியால் சாதித்துக் காட்டிய சுவாரஸ்ய சம்பவம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

அஜித் தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, முகவரி, வாலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு முதன் முதலாக நல்ல அடையாளத்தை கொடுத்த படம் என்றால் ஆசையும், காதல் கோட்டை படமும் தான். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து நட்சத்திர நாயகனாக அஜித் உயர்ந்துள்ளார்.

அஜித் ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தில் தபுக்கு ஜோடியாக அஜித் ஒப்பந்தமானார்.  அப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கினார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆனால், இப்பட தொடக்கத்திலேயே அவர் ஒரு விபத்தில் சிக்கினார். அதனால், தயாரிப்பாளர் தாணு அஜித் கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர்களை தேட ஆரம்பித்தார். இதை அறிந்த அஜித் வீல் சேரிலேயே தாணு அலுவலகத்துக்கு சென்றார். எனக்கு ஒரு வாரம் டைம் தாங்க. அடுத்த வாரம் நான் நடந்துவிடுவேன். என் ரோலை மாற்ற வேண்டாம் என்று கேட்டாராம். சொன்னதுபோலவே அடுத்த வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அஜித்தின் மிகப் பெரிய போராட்டத்திற்கு வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version