என் காலில் அஜித் விழுந்து வணங்குவார்… – மனம் திறந்த கலா மாஸ்டர்!

0
249
#image_title

என் காலில் அஜித் விழுந்து வணங்குவார்… – மனம் திறந்த கலா மாஸ்டர்!

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். இவர் ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர், நடிகைகளை “ஆட்டுவித்தவர்”. இவருடைய அக்கா கிரிஜா. இவரும் நடன கலைஞர்தான். இவருடைய கணவர்தான் ரகுராம். இவரும் நடன இயக்குநராவார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தனர்.

பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு, டான்ஸ் மாஸ்டர் ரகுராமிடம் பணியாற்றினார். இவருடய ஆதரவால்தான் தமிழ் சினிமாவில் கலா மாஸ்டர் நுழைந்தார். இன்று இந்திய அளவில் சிறந்த நடன இயக்குநர் என்ற விருதும் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் உதவியாளராக இருந்து வந்த கலா மாஸ்டருக்கு ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் தமிழில் நடன இயக்குநராக அறிமுகமானார். இதன் பிறகு, கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘புதுபுது அர்த்தங்கள்’ படத்தின் நடன இயக்குநராக பணியாற்றினார். கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட பாடல்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

ஒரு சேனலில் கலா மாஸ்டர் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் அஜித் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நடிகர் அஜித் ஒரு சிறந்த மனிதர். நல்ல நடிகர். அவர் என்னிடம் நடனம் கற்க என் வீட்டிற்கு வருவார். நடனம் கற்றுக்கொள்வதற்கு முன் தினமும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு நடனம் பயிற்சி செய்வார். இப்போது கூட அவரை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.