Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தல… அஜித் செய்த அட்டகாசம்! 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த ரகசியம் என்ன.?

தல… அஜித் செய்த அட்டகாசம்! 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த ரகசியம் என்ன.?

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் அஜித்குமார். தற்போது அவர் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரங்கு அமலுக்கு முன் வலிமை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் நடத்தினர். சூட்டிங் முடிந்த நிலையில் அஜித் சென்னை செல்வதற்காக விமான டிக்கெட் தயாராக இருந்த நிலையில், அதனை ரத்து செய்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் வந்துள்ளார். நடிகர் அஜித் ஒரு மிகச்சிறந்த பைக்ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர். ஹைதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 600 கிலோமீட்டர் சென்னை வரை பைக்கிலேயே வந்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சென்னையில் அவர் பைக்கில் சென்ற சம்பவமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version