Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இத்தாலி கார் ரேஸில் வெற்றி!.. அஜித் மீது சரக்கை ஊற்றி கொண்டாடிய டீம்!.. வைரல் வீடியோ!…

car race

நடிகர் அஜித் ஒரு நடிகர் மட்டுமே இல்லை. பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என நடிப்பை தாண்டி அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் அதை செய்ய தவறுவதே இல்லை.

அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை என்பதால் திருமணத்திற்கு பின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில்தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டார். அதில் சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் அஜித்தின் டீம் 3வது இடத்தை பிடித்தது.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் அப்போது இணையத்தில் வைரலானது. எனவே, அஜித்துக்கு பலரும் வாழ்த்து சொன்னார்கள். துபாய் ரேஸை முடித்துவிட்டு அடுத்து ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறவுள்ள கார் ரேஸில் கலந்துகொள்ள அஜித் சென்றார். இப்போது இத்தாலி நாட்டில் நடைபெற்ற 12 ஹவர்ஸ் ஆப் முகெல்லா கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி 3வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது.

எனவே, அஜித் தங்கள் அணியுடன் அந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீட்யோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாம்பயின் பாட்டிலை குலுக்கு குலுக்கி அடிக்கும் அஜித், அவர் மீது சாம்பயின் பாட்டிலை ஊற்றும் அவரின் அணியினர் என செம ஜாலியாக அந்த வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். இந்த வீடியோக்களை அஜித் ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு, அஜித்துக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

 

Exit mobile version