“அஜித் வைத்திருக்கும் நம்பிக்கை”.. “அதனால் எங்களுக்கு ஏற்படும் பிரஷர்”..

0
96
"Ajith's faith".. "So the pressure on us"..

அஜித் குமார்: தமிழ் திரை உலகில் “அல்டிமேட் ஸ்டார்” என்று அறியப்படும் இவர், “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், இவர் “கார் பந்தயங்களில்” ஈடுபடுவதை தனது விருப்பமாக வைத்துள்ளார்.இவர் புதிதாக “கார் ரேசிங் அகாடமி” ஒன்றைத் தொடங்கியுள்ளார். கார் பந்தயத்திற்கு என ஒரு அணியையும் உருவாக்கி அதற்கு அஜித் அவர்கள், “தலைமை கார் ஓட்டுநராகவும்” உள்ளார்.

அஜித் அவர்கள் நடிப்பில் வெளியான “பில்லா மற்றும் ஆரம்பம்” படத்தை இயக்குனர் “விஸ்ணுவர்தன்”, தற்போது இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். இவர் “2003 ஆண்டு” தெலுங்கில் எடுக்கப்பட்ட “குறும்பு” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்நிலையில்தான் விஷ்ணுவர்த்தன் அவர்களுக்கு பில்லா படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது, இந்த படம் அஜித் மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்கும் புகழை பெற்று தந்தது.

இந்த படத்திற்கு பிறகு பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷ்ணுவர்தன், பில்லா படத்தை பற்றி பேசியிருந்தார், அதில் அவர், பில்லா படம் கிடைத்தது, தெருவில் விளையாடி கொண்டிருந்தவனுக்கு “ஸ்டேடியத்தில் விளையாட வாய்ப்பு” கிடைத்தது போல் இருந்தது என்றார். பில்லா படத்தில் விஷ்ணுவர்தன், அஜித் அவர்களை, மிகவும் “ஸ்டைலான டான்” போல காட்டியிருந்தார். “ரஜினிகாந்த்” நடிப்பில் முன்னதாக வெளியான பில்லா படம் ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தது. இந்நிலையில் அதிக பிரஷர் தனக்கு வந்ததாகவும், வளர்த்து வரும் நிலையில் இது போன்ற ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பலர் தெரிவித்தனர், என்று விஷ்ணுவர்தன் தெரிவித்திருந்தார்.

ஆனால் அஜித் அவர்கள் தனது இயக்குனர்கள் “அதிக நம்பிக்கை” உடையவர். அவர் வைத்திருக்கும் நம்பிக்கையே இயக்குனர்களுக்கு படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற “பிரஷரை” கொடுக்கும் என்று தெரிவித்தார். பில்லா படம் வெளியாகி ரசிகர்களை மிக மகிழ்ச்சி அடைய செய்தது.