Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதி நடிக்க ஆசைப்பட்ட தல  அஜித்தின் படம்! தளபதி தானே வெளியிட்ட தகவல்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்  தளபதி விஜய்.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.இவரை தமிழகத்தின் நம்பர் 1 நடிகர் என்று கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபமெடுத்து உள்ளது.  இந்நிலையில் விஜய்க்கு தமிழ்சினிமாவில் கடும் போட்டியாக இருப்பது அஜித் அவர்களே.

அஜித் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் படம்தான் மங்காத்தா.இந்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு ஆவார்.அஜித்குமார்,திரிஷா, அர்ஜூன் ,மகத், பிரேம்ஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்து இருப்பார். மேலும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் என்றே கூறலாம்.இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆவார்.

இந்தப் படத்தின் குறித்து தளபதி விஜய் கூறிய ஒரு தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிக அளவில் பரவி வருகிறது.அது என்னவென்றால் இந்த படத்தில் அர்ஜூன் ரோல் எனக்கு கொடுத்திருக்கலாமே நான் நடித்திருப்பேன் என்று வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்னாராம்.

Exit mobile version