Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 நடிக்க திரும்பும் முன்னாள் நாயகி!!

தனது அழகு கொஞ்சும் நடிப்பினால் இளைஞர்களை சொக்கி போட்ட முன்னாள் நாயகி பிரியங்கா திரிவேதி. பெங்காலி படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கிய பிரியங்கா திரிவேதி, தமிழ் சினிமாவில் ‘ராஜ்ஜியம்‘ படத்தின் மூலம் விஜயகாந்துக்கு கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் தல அஜித்துடன் ‘ராஜா’ படத்தில் இவரது நடிப்பினால்  பெரிதும் பிரபலமானார்.இந்தப்படத்தில் இவரது இன்னசென்ட் நடிப்பினால் பல ரசிகர்களின் நெஞ்சில் குடி கொண்டார்.

அதன்பின் விக்ரமுடன் ,காதல் சடுகுடு. படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குறைந்துகொண்டே வந்தது.

இதனால் பெங்காலி கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்க தொடங்கினார். கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்த பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார். இப்போது சில கன்னட படத்தில் நடித்து வருகிறார்.அவரது நடிப்பில் உருவான ,ஹௌரா பிரிட்ஜ், திரைப்படம் விரைவில் தமிழிலும் கன்னடத்திலும் வெளியாக உள்ளது.

தற்பொழுது தமிழில் இவர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது பிக்பாஸ் பிரபலங்களான மகத், யாஷிகா ஆனந்த் நடிக்கும் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா திரிவேதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இவரை மீண்டும் தமிழ் திரையில் காண ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.

 

Exit mobile version