Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜிம் வொர்க் அவுட் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் ராஜா பட நடிகை!

அஜித் தனக்கென தனி ரசிக் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே தமிழ்நாட்டில் கொண்டுள்ளார்.அஜித் நடித்துக்கொண்டிருக்கும் வலிமைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தல 61  படத்தை பற்றிய செய்திகளும் வெளிவந்து அவரது ரசிகர்களை குஷியாக்கி கொண்டிருக்கின்றன.

கடந்த 2002 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ராஜா. இதில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா திரிவேதி ஆகியோர் நடித்தனர். வடிவேலு காமெடியில் அசத்தி இருந்தார்.

தமிழில் பிரியங்கா திரிவேதி காதல் சடுகுடு என்ற படத்திலும் நடித்தார். அதற்குப் பிறகு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

பிரியங்கா திரிவேதியின் வயது தற்போது 42. மேலும் இவர் தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை சீராக வைத்துள்ளார். இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.பிக் பாஸ் யாஷிகாவும் மகத்தும் மற்றும் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதற்காக பிரியங்கா கடுமையான உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Exit mobile version