மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.மேலும் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டது.
மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம் தான்.அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.பாலமேடு,அவனியாபுரம் ,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் புகழ்பெற்றதாகும்.இந்நிலையில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளின் மொத்த வசூல் ரூ 800 கோடி வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகின்றது.அதனால் அதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாரத்தின் ஏழு நாட்களுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும்.ஆனால் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதனால் இன்று மது கடைகளில் வழக்கத்தை விட அளவு மது விற்பனையாகும் என எதிர்பார்க்கபடுகின்றது.