Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

0
159

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் பதிவாகி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதவாறு:

நீங்கள் அனுப்பியுள்ள பார்சல் திரும்பி வந்துள்ளதாக உங்களுக்கு போன்வரும்.அதில் இது குறித்து தகவல் தெரிய வேண்டும் என்றால் ஒன்றை அழுத்தவும் என்று கூறுவார்கள்.நாம் இதனை நம்பி ஒன்றை அழுத்திய பிறகு நீங்கள் மும்பையில் இருந்து த தைய்வானுக்கு அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது.அதில் போதை பொருட்கள் உள்ளது.நாங்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளோம் என்று கூறுவார்கள்.

பின்பு உங்களை அழைப்பினை காவல் நிலையத்திற்கு இணைக்கிறோம் என்று தெரிவிப்பார்கள்.பிறகு காவல்துறை அதிகாரி போல் இன்னொரு நபர் பேசுவார்.

அவர் உங்களின் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை பயன்படுத்தி தான் இதை செய்து உள்ளீர்கள்.எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் போகிறோம் என்று மிரட்டுவார்கள்.மேலும் உடனடியாக நீங்கள் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் கூறுவார்கள்.

நான் இதுபோன்று செய்யவில்லை என்று நீங்கள் பதில் கூறினால், மற்றொரு நபர் நான் அரசு வழக்கறிஞர் என்று உங்களுடன் பேசுவார்.நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று அந்த வழக்கறிஞர் போல் பேசுபவர் கேட்பார்.இதன்பிறகு மேலும் 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று பணத்தை நுதனமாக பிடுங்கி விடுவார்கள்.

கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோன்று 70 புகார்கள் பதிவாகியுள்ளன என்றும், இதுபோன்று காரணங்களை கூறி ஏதேனும் எண்ணில் இருந்து உங்கள் தொலைபேசிருக்கு போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்வதாக சைலாயேந்திர பாபு அவர்கள் வேண்டுகோள் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.