Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்!

"Alert people" A new strain of coronavirus is confirmed! Check it out in your hometown!

"Alert people" A new strain of coronavirus is confirmed! Check it out in your hometown!

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்!

கடந்த 2020 ஆம் ஆண்டில் முதன் முதலில் சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் கண்டுபிடிக்கபட்டது.அதனையடுத்து அந்த வைரஸானது உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மக்களுக்கு பல்வேறு வகையான  கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தது.அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்தது.

அதனால் மீண்டும் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.அதனால் போக்குவரத்து சேவைகளும் செயல்பட தொடங்கியது.இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனா, ஜப்பான்,  வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப்7 வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றபட்டு வருகின்றது.

இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் செய்யப்பட்டது.அப்போது 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதில் பெங்களூரு நகரில் 24 பேருக்கும்,கோலாரில் 3 பேருக்கும், சித்ரதுர்கா, ஹாசன், மண்டியா, உடுப்பி,உத்தரகன்னடா,ராய்ச்சூர், பெலாகாவியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 309 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக சீனாவில் பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனா பிஎப்7 வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. குஜராத், ராஜஸ்தானில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் கர்நாடகாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என கூறபடுகிறது.இதனால் அங்கு அச்சம் நிலவி வருகின்றது.

Exit mobile version