Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்

 

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஆலியா பட். இவர் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். அதற்கு முன் ஆலியா பட் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து அவர் நடித்த ஹைவே, கல்லி பாய், டியர் ஜிந்தகி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவர் பாராட்டுக்களை பெற்றார்.

 

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் தான் கர்ப்பம் அடைந்துள்ள தகவலை அவரே அறிவித்திருந்தார்.

5 வருட காதலுக்கு பின் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தான் பிரபல நடிகர் ரன்பீர் கபூரைத் ஆலியா பட் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே ஆலியா கர்ப்பம் அடைந்திருப்பார் எனவும் பாலிவுட் மீடியாக்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.

 

மேலும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைவது பாலிவுட்டில் ஒன்றும் புதிதல்ல என்றும் அவர்கள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்றும் ஒரு பட்டியலையே அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் நேஹா தூப்பியா, கொன்கனா சென் சர்மா, ஸ்ரீதேவி, சரிகா, செலினா ஜெட்லி, அம்ரிதா அரோரா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகளில் சிலர் என அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

Exit mobile version