Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்!மம்தாவின் முடிவு!

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. சமீபத்தில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். இதற்காக வருகின்ற 19ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டிற்கு ஆதரவாக எங்கள் கட்சி நிற்கும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவில் நாடும் ஆயுதப்படையில் முழுமையாக ஆதரிக்கின்றன என்றும் கூறியுள்ளார். மேலும் தொழில்நுட்ப ரீதியாக இது தான் சரியான முடிவு என்றும் அறிவித்துள்ளார்.

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,’ வெளி விபரங்கள் தொடர்பான பிரச்சினையில் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.இதுகுறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’ என்று பதிலளித்தார்.

Exit mobile version