Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது.

மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில் திறந்து இருந்தால், மட்டுமே சரி செய்ய முடியும். இதற்காக, இன்று காலை 11 மணி அளவில் தமிழகம் முழுவதும் அனைத்து திருக்கோயில்களையும் திறக்க வலியுறுத்தி பாஜக சார்பில் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் அறத்தின் வழி நிற்பவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக அரசுக்கு அனைத்து திருக்கோயில்களையும் திறப்பதற்கு வலியுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version