Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் கட்டாயம் வரக் கூடாது!! ஸ்ட்ரிட் ஆர்டர் போட்ட விஜய்!!

All these people should not come to the convention!! Vijay placed a street order!!

All these people should not come to the convention!! Vijay placed a street order!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர்.  இவர் மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவர் சினிமா துறையில் இருந்து விலகி அரசியலுக்கு செல்ல காரணம் மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்க்கே.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக விஜய் தனது தொண்டர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தனது  மாநாட்டிற்கு முதியவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள், பள்ளி சிறுவர் சிறுமிகள், நீண்ட காலமாக உடல் நலம் பாதிப்படைந்தவர்கள் மற்றும் வெகுத்தொலைவில் உள்ளவர்கள் வர வேண்டாம் என அறிக்கையில் கூறியுள்ளார்.

இதற்கான காரணம்  உங்களின் உடல் நலம் எனக்கு மிகவும் முக்கியம் என கூறியுள்ளார். உங்களின் ஒருவனாக இதை எடுத்து கொள்ளுங்கள். மேலும் தவெக தலைவர் விஜய் சமூக ஊடகங்களின் வழியாக தங்களின் வீடுகளில் இருந்தே வெற்றிக் கழக விழாவை காணலாம் என அன்பாக கூறியுள்ளார். இந்த நெகிழ்வான நேரத்தில்  தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு வரவிருக்கும் அணைத்து தொண்டர்களும் முறையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதுவே   நமது குறிக்கோள்.

நாம் மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கையில் தெரிவித்து தனது தொண்டர்கள் அனைவரையும் வி.வே சாலையில் சந்திப்போம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Exit mobile version