Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புயல் காலங்களில் இவர்களெல்லாம் பணியாற்ற வேண்டும் – சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

Salem Collector S. Karmegam

Salem Collector S. Karmegam

புயல் காலங்களில் இவர்களெல்லாம் பணியாற்ற வேண்டும் – சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாண்டஸ் புயல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஏற்காடு உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் அரசு உயரதிகாரிகள் புயல் காலம் முடியும் வரை பணியாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான பால், மற்றும் மருந்து பொருட்கள், தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை செய்திடவும், அவசர மீட்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயத்தில் பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version