பூஜையறையில் இந்தப் படங்கள் அனைத்தும் வைக்கக்கூடாது! உடனடியாக நீங்களும் கவனித்து மாற்றுங்கள்!
இந்த பதிவின் மூலம் நம் வீட்டில் எந்தெந்த சாமி படங்கள் இருக்கலாம் எந்தெந்த சாமி படங்கள் இருக்கக்கூடாது என்பதனைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நாம் இந்த மாதிரியான சின்ன தவறுகள் செய்வதன் மூலம் கூட நம் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரச்சனைகள் ஏற்படும் அதனால் அவை வராமல் முன்கூட்டியே நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜையறை என்பது அவரவர்களின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும்.
நம் வீட்டில் கட்டாயமாக இருக்க வேண்டிய சாமி படங்கள் என்றால் மூன்று தான். அவை விநாயகர் ,சரஸ்வதி ,லட்சுமி இந்த மூன்று படங்களும் கட்டாயமாக இருக்க வேண்டும். வீட்டில் சிலை வடிவில் விநாயகர் இருந்தாலும் புகைப்பட வடிவில் விநாயகர் இருக்க வேண்டும். மேலும் சில சாமி புகைப்படங்களை வைக்கலாம் இவை கட்டாயம் இல்லை எனவும் கூறப்படுகிறது. அவை பெருமாள் குறிப்பாக பெருமாளின் புகைப்படத்தை தனியாக வைத்து நாம் வழிபடக்கூடாது பத்மாவதி தாயாரும் அவருடன் இருக்கும்படி வைத்து வழிபட வேண்டும்.
அதனையடுத்து முருகனை புகைப்படத்தை தனியாக வைத்து வழிபடுவதை விட வள்ளி தெய்வானை உடன் முருகன் இருப்பது போல் வைத்து வழிபடுவது மிக சிறந்தது. அதனை எடுத்து ஆஞ்சநேயர் ,சிவன், நரசிம்மர் போன்ற தெய்வங்களின் புகைப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுவது என்பது சிறந்தது அல்ல ஏனெனில் அவர்களின் புகைப்படங்கள் தனி பூஜையறை இருந்தால் மட்டுமே வைத்து வழிபட வேண்டும்.
இந்த தெய்வங்களின் புகைப்படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு தினந்தோறும் பூஜை செய்ய வேண்டும். மேலும் பூஜை அறையில் கட்டாயம் வைக்க கூடாத படம் என்றால் அவை இறந்தவர்களின் புகைப்படம். மேலும் இறந்தவர்களின் புகைப்படங்களை கிழக்கு முகமாக வைக்க கூடாது. மேலும் இறந்தவர்களின் புகைப்படங்கள் எப்பொழுதும் தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். நீங்கள் சரியான முறையில் புகைப்படங்களை வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் ஏற்படும் தேவையற்ற பிரச்சினைகள் நீங்கி சுபம் பெறுவர்.