BREAKING NEWS: சென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி!
இந்த காலகட்டத்தில் மதுவுக்கு அடிமையாக அதைவிட போதை பொருளுக்கு அடிமையாகு பவர்கள் அதிகமாகி விட்டனர். இந்தாண்டு வருடம் தொடங்கி ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை மொத்தம் போதைப் பொருள் குறித்து தற்போது வரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பழத்தின் கீழ் 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செயப்பட்டவர்களிடம் இருந்து 1500 கிலோ கஞ்சா 3 கிலோ மெத்தப் பெற்றவன் 2 கிலோ ஆப்ட்ரின் 10 கிலோ கஞ்சா எண்ணெய் மற்றும் 166 போதை ஸ்டாம்ப் அதுமட்டுமின்றி போதை மாத்திரைகள் உட்பட்டவை அனைத்தும் கைப்பற்றினர்.
சமீப காலத்தில் சென்னையில் போதைப்பொருட்கள் கடத்தல் குறித்து அறுபத்தி எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிலிருந்து 2 கோடி மதிப்புள்ள 1300 கிலோ அளவு கஞ்சா மற்றும் ஹெராயின் பிரவுன் சுகர் ஆகியவை போலீசார் கைப்பற்றினர். அனைத்தையும் அகற்றும்படி நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் செங்கல்பட்டில் உள்ள தனியார் ரசாயன பொருள்கள் ஆழிக்கும் இடத்தில் இந்த 1300 கிலோ கஞ்சா ஹெராயின் பிரவுன் சுகர் ஆகியவற்றை இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் 1000 டிகிரி செல்சியஸில் எரித்தனர்.
இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த போதை பொருளுக்கு அடிமையாகின்றனர். இதிலிருந்து இவர்கள் மீள பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வந்தாலும் ஏதும் பயன் அளிக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் போன்றவை 50 சதவீதம் அதிகரித்ததாக கூறியுள்ளனர். நாளடைவில் 100% ஆக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து 489 பள்ளி கல்லூரிகளில் இது குறித்து விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் போதைப் பொருள் கடத்துபவர்களின் சொத்துக்களை முடக்குவது குறித்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இப்பொழுது 1300 கிலோ கஞ்சாவை அகற்றியது போல மேலும் சில வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2,000 கிலோ கஞ்சாவை அளிப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதர மாநிலங்களான ஆந்திரா திரிபுரா ஆகியவற்றிலிருந்து இருந்து தான் இங்கு கஞ்சா கொண்டுவரப்படுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கடிதம் எழுதுவதாகவும் கூறியுள்ளனர். அதேபோல கஞ்சா விற்கும் கடைகளை கண்டறிந்து சீல் வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதுவரை அவ்வாறு போதைப் பொருள் விற்ற 168 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.