Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு விதித்த திடீர் தடை! அதிர்ச்சியில் மக்கள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று காலை 8 மணி அளவில் காமராஜர் சாலையில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தயிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் இன்று முதல் சிறப்பு வழிபாடு பொது விருந்து நடத்துவதற்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு திடிரென்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்துக்கு அனுமதி வழங்கவேண்டிமென்று தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் தற்சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதி வழங்க முடியாது என்று அறநிலையத் துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, முக்கிய ஆலயங்களில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதியான இன்று பொது விருந்து நிகழ்வினை அனுமதிப்பது தொடர்பாக போதுமான அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சென்ற மாதம் இருபத்தி 26ம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருப்பதால் பொது விருந்து நிகழ்வினை நடத்துவதற்கு அனுமதி வழங்க இயலாது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Exit mobile version