VSK DMK: அரசு நிகழ்ச்சி பேனர்களில் தங்களது பெயரை குறிப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டை விசிக எம்எல்ஏ வைத்துள்ளார்.
திமுக மற்றும் விசிக கூட்டணியானது முறிந்துவிடும் என பலரும் கூறி வரும் நிலையில் தினசரி இருவருக்கிடையே புகைச்சல் ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் விசிக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய் புதியதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் சேர அதிக வாப்புள்ளதாகவும் கூறுகின்றனர். ஏனென்றால் விஜய். கூட்டணி கட்சியினருக்கும் ஆட்சியில் அதிகாரம் உள்ளது என கூறியது தான் இதற்கு முக்கிய காரணம்.
மேலும் விசிக-வும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திமுக தங்களுக்கு இழைக்கும் அவமானங்களை சுட்டிக்காட்டி பேசி வருகின்றது. இப்படி இருக்கையில் நாகப்பட்டினத்தில் வெற்றி பெற்ற ஆளூர் ஷா நவாஸ், ஏன் எங்களது பெயரை எந்த ஒரு அரசு நிகழ்ச்சி பேனர்களிலும் போடுவதில்லை என்ற கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் அன்பில் மகேஷுடான நிகழ்ச்சியிலேயே கூறியுள்ளார்.
மற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் இருக்கும் பட்சத்தில் ஏன் எங்களது பெயரை போடவில்லை. இதையே ஒரு காரணமாக வைத்து சமூக வலைத்தளத்தில் இரு கட்சிகளுக்கிடையே பிரிவு என்று சொல்லி வருகிறார்கள். இதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும், அதுமட்டுமின்றி இவ்வாறு எங்களது பெயரை போடுவது எங்களுக்குண்டான மரியாதையை அங்கு கொடுப்பதாகும். இவ்வாறு ஆளூர் ஷா நவாஸ் பேசியது மேலும் கட்சிக்குள் விசிக-வை ஓரங்கட்டுகிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.