இதெல்லாம் வீடுகளில் கட்டாயம் வையுங்கள்!! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
117
All this must be kept in the houses!!

தமிழக மின்சாரவரியமானது வீடுகளில் தங்களது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க ஒரு சிறிய அளவிலான RCD யை பொருத்தும் படி அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மின்சார வாரியமானது மக்களுக்கு ஏற்றவாறு அவ்வபோது புதிய அப்டேட்டுக்களை செய்து வருகிறது. அந்த வகையில் பருவ மழை காலத்தில் யாரையும் பாதிக்காத வகையில் இருக்குமாறு ஆர்சிடி யை பொருத்தம் படி அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஆர் சி டி என்பது மின்திறன் அதிகளவு கடத்துவதை உடனடியாக நிறுத்தும் தன்மை கொண்டது எனக்கு கூறலாம்.

இது மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இது ஒவ்வொரு வீட்டிலும் பொருத்துவது அவசியம் என கூறியுள்ளனர். குறிப்பாக ஆர் சி டி பொருத்துவதால் மேற்கொண்டு ஈரம் அல்லது தரைகளில் நின்று சுவிட்சுகளை போடும் பொழுது தேவையற்ற மின் கடத்தி ஆகுவதை தவிர்க்கலாம். மேற்கொண்டு மின் கடத்தும் பொழுது இது உடனடியாக வீட்டில் உள்ள மின்னோட்டத்தை நிறுத்திவிடும்.

அதனால் ஒவ்வொரு வீட்டிலும் 30 எம்ஏ ஆர்சிடி யை பொருத்த வேண்டும் என தமிழக மின்சாரவாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் உயிர் சேதம் மற்றும் காயங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதோடு நமது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும். குறிப்பாக இது மழை மற்றும் கோடை காலங்களில் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும்.