Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

All this sleep? Parents in shock!

All this sleep? Parents in shock!

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

மக்களுக்கு எதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏதோ ஒன்றை செய்து கொண்டு இருக்கின்றனர்.சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் பெரிய முடிவை மிக சுலபமாக எடுத்து விடுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவில் கீலப்பூடி காலனியை சேர்ந்த பெரியப்பன் (55).இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.முருகைய்யன் (30) மற்றும் வேலு (25). இருவருக்கும் திருமணமான நிலையில் வேலுவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரோஜா(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு ரோஹித் (7) என்ற ஏழு வயது மகனும், இலக்கியா(5) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ரோஜாவிற்க்கும், வேலுவிற்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறினால், ரோஜா கோபித்துக்கொண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த வேலு, தன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வரலாம் என அங்கு சென்றுள்ளார்.

ஆனால், மனைவியோ வர மறுத்து விட்டதால் வேலு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.எனவே நேற்று முன்தினம் கிராமத்தின் நடுவே உள்ள காட்டுக்கு சென்று ஒரு கருவேல மரத்தில் தூக்கில் தொங்கினார்.இந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொதட்டூர் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் வேலுவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version