Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!!

#image_title

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!!

இங்கு முழங்கால், வலி ரத்த அழுத்தம், டயாபடீஸ், கெட்ட கொழுப்பு ரத்தத்தில் அதிகரிப்பது இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு இயற்கையான ரெமிடியை இங்கு பார்க்கலாம்.

இதற்கு நமக்கு முதலில் கருஞ்சீரகம் வேண்டும். இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கும் டயாபடீசை அளவோடு வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது.

மேலும் கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், முழங்கால் வலி, முழங்காலில் வீக்கம் ஆகிய பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் இந்த கருஞ்சீரகம் பயன்படுகிறது.

அதே நேரத்தில் இந்த கருஞ்சீரகத்தை மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். அடுத்து நமக்கு தேவைப்படும் பொருள் ஆளி விதைகள்.

இந்த ஆளி விதைகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் நிரந்தரமாக கரையும்.

மேலும் ஜீரண மண்டலத்தையும் துரிதப்படுத்தும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் வராது.

இதையும் சரியான அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து தேவைப்படும் மூன்றாவது பொருள் வெந்தயம்.

இது நம் உடம்பில் உள்ள வாத தோஷம், கபதோஷத்தை சரிப்படுத்தும். உடம்பில் உள்ள வலி வீக்கத்தை சரிப்படுத்தும்.

செய்முறை:
ஒரு கிளாஸில் அரை தேக்கரண்டி ஆளி விதையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரை தேக்கரண்டி அளவு கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். இதோடு இன்னும் அரை தேக்கரண்டி அளவு வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் மூடி வைத்து விடவும்.

இதை காலையில் பல் துலக்கிய பின் வடிகட்டி விட்டு வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும்.

இதைத் தொடர்ந்து 11 நாட்கள் பருகி வந்தால் நம் உடம்பில் உள்ள அனைத்து வலிகளையும் வீக்கத்தையும் சரி செய்து விடும்.

இந்த தண்ணீர் மட்டுமல்லாது வடிகட்டி எடுத்து வைத்த மூன்று பொருட்களையும் நாம் எப்போது வேண்டுமானாலும் உண்டு வரலாம்.

ஆனால் உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் இதை நேரடியாக உண்ணாமல் அரை இதை நன்கு அரைத்து தயிர் அல்லது மோருடன் கலந்து குடித்து வரலாம்.

Exit mobile version