அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

0
288

அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார்.

பெரியகுளம் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்களது சீரிய முயற்சியிலும் பெரியகுளம் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து மகளிர் காவல் நிலையம் இல்லாத ஒரே தாலுகாவாக பெரியகுளம் தாலுகா இருந்து வந்தது. இதனால் பெரியகுளம் பகுதியில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாமல் இருந்து வந்தது.

மேலும் இப்பகுதியில் உள்ள பெண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் பெரியகுளத்தில் பல்வேறு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும், தொடர் கோரிக்கை வைத்ததை அடுத்து பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட (ஆடு பாலம் பகுதியில்) வணிக வளாக கட்டிடத்தில் புதியதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், காவல் ஆய்வாளர்கள் அன்னமயில், மீனாட்சி, சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், பெரியகுளம் வட்டாட்சியர் ராணி, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா, அஇஅதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து மகளிர் காவல் நிலைய வருகையால் இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.