UPI இருந்தால் போதும்.. ATM கார்டு இல்லாமலே இனி ஈஸியாக CASH எடுக்கலாம்!!

0
74
All you need is UPI.. Now you can easily withdraw CASH without an ATM card!!

இன்றைய நவீன உலகில் வாங்கித் துறையில் புதிய தொழிநுட்ப பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த காலங்களில் பணம் எடுக்க மற்றும் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது.இதனால் நேரம் வீணாவதோடு கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கு மாற்றாக தற்பொழுது ATM மெஷின் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ATM கார்டு மூலம் பணம் எடுப்பது பணம் செலுத்துவது,வங்கி கணக்கு இருப்பு அறிதல் போன்ற பல சேவைகள் கிடைப்பதால் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை ATM கார்டு பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தற்பொழுது ATM இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி பணம் எடுக்க ATM கார்டு தேவைப்படாது.உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். அதில் உள்ள UPI மூலம் பணத்தை எடுக்க முடியும்.ATM மெஷினில் பணம் எடுப்பதற்கு இரண்டு வசதிகள் திரையில் தோன்றும்.

அதில் இரண்டாவதாக தோன்றும் UPI என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.பிறகு தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை உள்ளீடு செய்ய வேண்டும்.பிறகு, திரையில் தோன்றும் QR குறியீடை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள UPI செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

அடுத்து நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை தேர்வு செய்து PIN உள்ளிடவும்.பிறகு Continue என்ற பட்டநாய் கிளிக் செய்தால் உள்ளிட்ட தொகை வெளிவரும்.UPI மூலம் நாளொன்றுக்கு ரூ.10,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.