Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருளை சேர்த்து தடவினால் போதும்! எப்படிப்பட்ட வெள்ளை முடியும் கருமையாக மாறும்!!

தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருளை சேர்த்து தடவினால் போதும்! எப்படிப்பட்ட வெள்ளை முடியும் கருமையாக மாறும்!!

பலருக்கும் சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனை உண்டாகிவிடும். மேலும் பலர் ஹேர் டை போன்றவற்றை வாங்கி உபயோகித்தும் வருவர். இதனால் முடி கொட்டும் பிரச்சனை வருவதுடன் தலைவலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும். நரை முடி பிரச்சனையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருட்களை தேய்த்து தடவினால் போதும் எப்பேர்ப்பட்ட வெள்ள முடியும் கருமையாக மாறிவிடும்.
<span;>காபித்தூள்
<span;>டீ தூள்
<span;>தேங்காய் எண்ணெய்
<span;>கடையில் விற்கும் காபித்தூள் மற்றும் டீ தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டும் சம அளவு அதாவது ஒரு ஸ்பூன் என்ற விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். காபி தூளில் கட்டித் தன்மை இருப்பதால் அதனை உரலில் இடித்து நைசாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் நூறு மில்லி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெயில் ஏழு சொட்ட எலுமிச்சம்பழச் சாற்றை ஊற்ற வேண்டும். இதற்கு மீறி ஊற்றக்கூடாது. இதனுடன் பொடியாக்கிய காபித்தூள் மற்றும் டீ தூளை கலந்து கொள்ள வேண்டும். பின்பு நன்றாக கலந்து மூடி வைத்து விட வேண்டும். டீத்தூள் எலுமிச்சைச்சாறு என அனைத்தும் நன்றாக இரண்டு மணி நேரம் ஊற வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் சூடு தண்ணீர் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சுடுதண்ணீர் மேல் இந்த தேங்காய் எண்ணெய் கலவையை பாத்திரத்துடன் வைக்க வேண்டும். அதாவது டபுள் பாய்லிங் மெத்தடை உபயோகிக்க வேண்டும். பின்பு இந்த தேங்காய் எண்ணெயை வடித்து எடுத்துக் கொள்ளலாம். இதனை தடவி வர நரைமுடி மற்றும் வெள்ளை முடி என அனைத்தும் கருமையாக மாறும்.

Exit mobile version