உப்பு மற்றும் மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை 5 நிமிடத்தில் பளிச்சென்று மாற்ற இதை செய்தால் போதும்!!

0
155
#image_title

உப்பு மற்றும் மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை 5 நிமிடத்தில் பளிச்சென்று மாற்ற இதை செய்தால் போதும்!!

நம் வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, உப்பு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*சீயக்காய் – 2 பாக்கெட்

*ஷாம்பு – 1 பாக்கெட்

*புளித்த மோர் – 1/4 கப்

*ஸ்க்ரப்பர் – 1

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 2 பாக்கெட் சீயக்காய் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 பாக்கெட் ஷாம்பு மற்றும் 1/4 கப் புளித்த மோர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பாத்ரூமில் உப்பு மற்றும் மஞ்சள் கறை படிந்துள்ள இடத்தில் தெளித்து விடவும்.

5 நிமிடங்களுக்கு பின்னர் ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்க்கவும். இவ்வாறு தேய்த்த பின்னர் 5 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.

அதன் பின்னர் மீண்டும் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து தண்ணீர் ஊற்றி பாத்ரூமை கழுவி விடவும். இவ்வாறு செய்தால் பாத்ரூமில் படிந்து கிடந்த மஞ்சள் மற்றும் உப்பு கறை முழுவதும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.

மற்றொரு தீர்வு:-

போராக்ஸ் சிறந்த கிருமி நீக்கியாக பயன்படுகிறது. ஈரமான ஸ்பாஞ்சை போராக்ஸ் தூளில் தோய்த்து பாத்ரூமில் உள்ள டைல்ஸில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் மீது நன்றாக ஸ்கிரப் செய்யவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாள்பட்ட உப்பு மற்றும் மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்கி விடும்.