Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“ஆடு மாடுகளை நடத்துவது போல தான் எங்களையும் நடத்துகின்றனர்”.. விஜய்யின் சாய்பாபா கோவில் மீது குற்றச்சாட்டு!!

Allegation against Vijay's Saibaba temple

Allegation against Vijay's Saibaba temple

“ஆடு மாடுகளை நடத்துவது போல தான் எங்களையும் நடத்துகின்றனர்”.. விஜய்யின் சாய்பாபா கோவில் மீது குற்றச்சாட்டு!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போவதாகவும் தனது 69 ஆவது படம் தான் இறுதியாக நான் நடிப்பது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை அதற்கு மாறாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில்  விஜய்யின் கோட் திரைப்படம் இறுதி கட்டத்திற்கு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தோடு விஜய் நடித்து மாபெரும் ஹிட் அடித்த கில்லியின் ரீ ரிலீஸ்-வும்  மீண்டும் சினிமா வட்டத்தையே கலக்கியும் வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் வசூல் சாதனையில் ரீ ரிலிஸ் மூவியில் இது முன்னிலையில் உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் அவர்கள் தனது அம்மாவிற்காக சென்னையில் உள்ள கொரட்டூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் விஜய் கலந்து கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.மேற்கொண்டு நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இந்த கோவில்ளுக்கு அவ்வப்போது சென்று வருகின்றனர்.

அத்தோடு அவரது ரசிகர்களும் ஏராளமானோர் தினம் தோறும் இந்த கோவிலுக்கு சென்ற வண்ணமாகவே உள்ளனர்.இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்று அந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கோவில் குறித்து பல கேள்விகளை கேட்டு வந்தது.அதில் ஒரு பெண்மணி, இங்கு வரும் நபர்களைக் கண்டு தான் மரியாதை அளிக்கிறார்கள்.

குறிப்பாக உபயதாரர்களுக்கு தனி மரியாதையும் எங்களைப் போல் வருபவர்களை ஆடு மாடு நடத்துவது போல் நடத்துகின்றினர்.கோவில் என்றாலே முதலில் அமைதியாக தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு இருக்கும் கோவில் தொண்டர்கள் எங்களைப் போன்றவர்களிடம் கோபத்தை காட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளனர் என்று அவர் கூறினார். தற்பொழுது இந்த பெண்மணி கூறியது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Exit mobile version