சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இடங்கணசாலை உள்ள அரசு மதுபான கடை தீபாவளி பண்டிகை அன்று இரவு 10 மணிக்கி கடை மூடப்பட்டது. ஆனால் எழுமாத்தனுர் கடை எண்: 7261 ல் இரவு 10 மணிக்கி தொடங்கி அடுத்தா நாள் மதியம் வரை சந்து கடையாக அந்த கடை விற்பனையாளர்கள் விற்பனை அதிக விலைக்கி விற்றனர்.
இளம்பிள்ளை பகுதியில் அதிகம் தறி பட்டறைகள் உள்ளது. அன்றாட கூலிக்கு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் நடுத்தர மக்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இந்த கடை இருப்பதால் ஆண்கள் அதிகம் பேர் மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு செல்வது இல்லை. இதனால் தறி பட்டறை முதலாளிகள் வடமாநிலங்களில் இருந்து பணியாளர்களை வேலைக்கி அமர்த்துகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் வேலை தட்டுப்பட்டு ஏற்படுகிறது. இதனால் அந்த கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் கோரிக்கையாக உள்ளது.