சீமானுடன் கூட்டணி.. தலைவர் நிச்சயம் அறிவிப்பார்!! தவெக பொதுச்செயலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!
நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டதை அடுத்து பல கட்சிகளும் தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.அந்த வரிசையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதாக இருந்த பொழுது இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்று பெரிய கேள்வியாக இருந்தது.அதற்கு முட்டுக்கட்டையாக நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவே போவதில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுடன் விஜய் ரகசிய சந்திப்பில் ஈடுபடுவதாகவும் அவருடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்தது. இது குறித்த சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களிடம் கேட்டபொழுது, எந்த ஒரு மறைமுக சந்திப்பும் எங்களுக்கிடையே கிடையாது.கூட்டணி வைக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பதை விஜய் ஸ்டைலில் வெயிட்டிங் என்று கூறி முடித்தார்.
தற்பொழுது பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தமிழக மற்றும் இதர மாநிலங்களில் பொதுமக்கள் பலருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் குறித்தும் மேற்கொண்டு பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் செய்தியாளர்கள் பலர் கேள்வி தமிழக வெற்றி கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி எழுப்பினர்.பொதுக்குழு கூட்டம் மற்றும் அரசியல் சார்ந்த எந்த ஒரு தகவலாக இருந்தாலும் தலைவர் நேரடியாகவே அறிவிப்பார் என்று கூறினார்.
அதேபோல நாம் தமிழர் கட்சி உடனான கூட்டணி குறித்து கேட்ட பொழுது, தலைவர் அனைவரிடமும் கலந்தோசித்து வருகிறார்.அனைத்து முடிவுகளையும் தலைவர் கட்டாயம் எடுப்பார் அதற்கான அறிவிப்பும் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார்.இவர் கூறியதை பார்க்கும் பொழுது விரைவில் கூட்டணி குறித்து தகவல்கள் வரக் கூடும்.