Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

#image_title

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கவுள்ளார்.

பிரதமர் பங்கேற்கும் இந்த பிரமாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கிட்டதட்ட உறுதிசெய்யப்பட்ட கட்சிகளான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்க்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி உறுதியான நிலையிலும் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது

இதர கூட்டணி கட்சிகளை சார்ந்த ஜி.கே.வாசன், பாரிவேந்தன்.ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோர் பிரதமர் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் பங்கேற்ற திருச்சி பொதுக் கூட்டத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி. தினகரன் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்காதது குறிப்பிடதக்கது.

Exit mobile version