வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு
வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கால்வாய்களை சீரமைக்கும் பணிக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்நிலையில் தான் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கால்வாய்களை சீரமைக்க தமிழக அரசின் நீர் வளத்துறை ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.